பள்ளிபாளையம் ஒன்றியம் வீரப்பம் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செம்மறி ஆடுகளுக்கு கண்களில் வீக்கம் நீர்க் கசிவு புதிய வகை நோயா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் வீரப்பம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு உள்ள னர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக ளுக்காக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். கூடுதலாக ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்க்கப்படும் ஆடுகளை விவசாயிகள் காலை மாலை நேரங்களில் அரசு புறம்போக்கு ஓடைகள் வாய்க்கால் கரை பகுதி உள்ளிட்ட இடங்க ளுக்கு மேச்சலுக்கு அழைத்துச் செல்கின்ற னர். கடந்த சில தினங்களாக மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் செம்மறி ஆடுகளின் கண் களில் வீக்கம் ஏற்பட்டு நீர் வடிந்த நிலை யில் காணப்பட்டது. ஆடுகள் சண்டை இட்டுக் கொண்டதால் இதுபோல கண்ணில் வீக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என விவசாயிகள் கருதினர். இந் நிலையில் தொடர்ச்சியாக அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டது. கண்களில் வீக் கம் ஏற்பட்டு நீர் வடிவதால், இது தொற்று நோயாக இருக்கலாம் என விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டது. மேலும் நோய் பாதிப் படைந்த ஆடுகள் கண்கள் தெரியாமல் பார்வை குறைபாடு காரணமாக தள்ளாடி படி திசை மாறி சென்று விடுவதாக விவசாயி கள் கவலை தெரிவிக்கின்றனர். பனிக்காலம் துவங்கி உள்ளதால் ஆடுகளுக்கு கடுமை யான சளி தொல்லையும் ஏற்பட்டுள்ள நிலை யில், இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறும் பொழுது பாதிக்கப்பட்ட ஆடுகளை மொத்தமாக அரசு கால்நடை மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத் தால், வண்டி வாகன செலவு உள்ளிட் டவை காரணமாக கூடுதலாக செலவுகள் ஏற் படும். எனவே கிராமத்திற்கு வரக்கோரி கால் நடை மருத்துவரை தொடர்பு கொண்டால் மருந்துகள் கைவசம் இல்லை என்றும், தனியார் கடைகளில் வாங்கிக் கொள்ளும் படியும் தெரிகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமபுற பகுதிகளில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி புதனன்று வீரப்பம்பாளையம் உள்ளிட்ட பல் வேறு இடங்களுக்கு வருகை தந்த கால்நடைத் துறை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு தடுப்பூசிகளை போட்டனர். தொடர்ந்து செம்மறி ஆடுகளின் கண்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான காரணிகள் கண் டறியப்பட்டு, முழுமையான மருத்துவ சிகிச் சைகள் செம்மறி ஆடுகளுக்கு வழங்கப்படும் என கால்நடை மருத்துவர்கள் தரப்பில் கூறப் பட்டுள்ளது.