சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதி: மத்திய அமைச்சரிடம் எல்.முருகன் கோரிக்கை
சென்னை, டிச.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை செய்து தர மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்.
மத்திய அமைச்சர்எல்.முருகன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-–
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, தமிழகத்தில் விமான நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் விமான நிலைய பெயர் மாற்றத்திற்கான சில கோரிக்கைளை முன்வைத்தேன்.
அதன் வகையில், கோவை விமான நிலையத்தை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்தேன். மேலும், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்குகூடுதலான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆங்கிலத்தில் ‘தூத்துக்குரீன்’ என்பதை ‘தூத்துக்குடி விமான நிலையம்' என்று மாற்றம் செய்வதற்கான கோரிக்கையையும் இந்தச் சந்திப்பின் போது முன்வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?