நிஷா பானு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு பணியிட மாற்றம்!

சென்னை, ஆக. 27 -
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜி யம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி களில் ஒருவர் நீதிபதி நிஷா பானு. சீனியா ரிட்டியில் 4-ஆவது இடத்தில் இருப்பவர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்தவர். தற்போது, இவரை கேரள உயர் நீதிமன்றத் திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்ச கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். இதற்கான பரிந்துரையையும் உச்ச நீதி மன்ற கொலிஜியம் ஒன்றிய சட்ட அமைச்ச கத்திற்கு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் மொத்தம் 14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்ற செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?