சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை துரத்தி சென்று மடக்கிப் பிடித்த ரெயில்வே போலீசார்

சென்னை, ஜூலை 14
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை ஆர்பிஎப் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வியாசர்பாடியைச் சேர்ந்த பயணிகளின் செல்போன்கள் திருட்டு தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுக் குழுவினர், சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டது.
பின்னர், அந்த ஆசாமி மேலும் ஒரு திருட்டை முயற்சிக்கும் போது ஆர்பிஎப் குழுவினர் அவனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடினான். ஆர்பிஎப் போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலுவின் மகன் ஜோஷ்வா (வயது 26) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவனிடமிருந்து 5 திருடப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் ஒரு டாப்லெட் உள்பட மொத்தம் ரூ.1,90,000 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபரும், மீட்கப்பட்ட பொருட்களும் அரசு ரெயில்வே காவலர்களிடம் (ஜிஆர்பி) ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜோஷ்வா நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டான்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?