சென்னை அயனாவரத்தில் பரபரப்பு குடும்ப தகராறில் 7 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை

சென்னை அயனாவரத்தில் பரபரப்பு குடும்ப தகராறில் 7 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை

சென்னை, ஜூலை 23–


சென்னையில் குடும்ப தகராறில் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(38). அவரது மனைவி ரெபெகா(32). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகள் ஸ்டெபி ரோஸி (வயது 7). சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


கடந்த ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை ஓட்டேரி போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ரெபெகா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.


இந்த நிலையில், இன்று காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து இறந்து கிடந்துள்ளார். மேலும் சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பரங்கிமலை போலீசார், குடும்ப பிரச்னை காரணமாக சதீஷ்குமார் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு யாராவது இவர்களை கொலை செய்ய முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சதீஷ்குமார் சிகிச்சை முடிந்தவுடன் அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%