அம்பத்தூரில் ‘டிஜிட்டல் கைது’ என்று கூறி ரூ.75 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது
Jul 25 2025
81

ஆவடி, ஜூலை 23–
சென்னை அம்பத்தூர், ராம் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை செல்போனில் அழைத்த ஒரு நபர், தன்னை மும்பை குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ரவியை டிஜிட்டலில் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரவி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.75 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் துறை கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.சுதாகர் தலைமையிலான போலீசார் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12வது படித்த கால் டாக்சி டிரைவர் ஆக வேலை செய்து வரும் அஜ்னஸ் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தனது வங்கி கணக்கை ஆன்லைனில் மோசடி செய்யும் நபருக்கு விற்று லாபம் பெற்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க புழல் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்த காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?