விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி சாதனை

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி சாதனை

விழுப்புரம்:

தேசிய அளவிலான என்ஐ ஆர்எப் தரவரிசைப் பட்டி யலில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி குறிப்பிடத் தக்க சாதனை படைத் துள்ளது. 2024ஆம் ஆண்டு 201-300 என்ற தர வரம்பிற்குள் இருந்த இக்கல்லூரி, 2025ஆம் ஆண்டுக்கான என்ஐ ஆர்எப் தர வரிசை பட்டிய லில் 154 ஆவது இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் செயல்பட்டு வரும் 52,081 கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த சாதனை தமிழகத்திற் கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெரு மையை பெற்றுத் தந்து உள்ளது. வேலூர் மண்ட லத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அர சினர் கலைக்கல்லூரி முதலிடம் வகித்துள்ளது. தேசிய தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த ஒரே கல்லூரி என்ற பெருமை யும் இதற்கு உண்டு. இச்சாதனையை அடை வதற்கு அயராது உழைத் திட்ட கல்லூரியின் என்ஐ ஆர்எப் ஒருங்கிணைப்பா ளர் க.ச.சதீஷ் குமார், என்ஐஆர்எப் குழு, கல்லூ ரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேரா சிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் ஆர்.சிவக் குமார் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரி வித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%