சாலை விபத்தில் மரணமடைந்த 2 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 லட்சம்: ஸ்டாலின் வழங்கினார்
சாலை விபத்தில் மரணமடைந்த இரண்டு குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால்,
இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்’’ என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில் ஏற்கனவே 10 தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து 25.10.2025 அன்று விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான மு. ராமதாஸ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை – திருச்சி பை-பாஸ் பாலத்தின்கீழ் சர்வீஸ் சாலையில் நின்றிருந்தபோது கார் மோதிய விபத்தில் சிக்கியும்,
26.08.2025 அன்று நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான கு.சரவணகுமார், வெண்ணந்தூர், மடம் பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சிக்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விரண்டு குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாசின் மனைவி சௌமியாவிடமும் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமாரின் மனைவி சங்கீதாவிடமும் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?