ரங்கயன் ஏரிக்கரை மீது சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பால ஜங்கமனஅள்ளி ஊராட்சிக் குட்பட்ட கிட்டன்கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற் பட்ட குடியிருப்புகள், சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் ரங்கயன் ஏரியி லிருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியை கடந்து தான், ஏரிக்கரை மீதுள்ள மண் சாலை வழியாக, கிட்டன்கொட்டாய் கிராமத்திற்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழைக்கு ரங்கயன் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் இக்கி ராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர், பயத்துடனே சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். எனவே, போர்க்கால அடிப்படையில் விரைந்து மேம்பாலம் மற்றும் ஏரிக்கரை மீது சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும், இதே கோரிக்கைளை வலியு றுத்தி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாத நிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்த னர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?