சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரஸல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரஸல்

கிரிக்கெட் உலகின் அதிரடி வீரர் களில் ஒருவரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆந்த்ரே ரஸல் (37) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக் காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல், ஜமைக்கா வில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடை பெறவுள்ள டி-20 தொடருடன் அவர் ஓய்வுபெறவுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி-20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கு இந்தி யத் தீவுகள் அணிக்கு பின்னடை வாக அமையும் என எதிர்பார்க்கப்படு கிறது. ரஸல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 84 டி-20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%