திருவாரூர் அருகே நீலக்குடியில் சர்தார் வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட மை பாரத் கேந்திரா மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இணைந்து சர்தார் 150 பாத யாத்திரை நவம்பர் 25 அன்று திருவாரூர் நீலக்குடி கேந்திர வித்யாலயா பள்ளியின் நுழைவு வாயிலிலிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி சுமார் எட்டு கி.மீ பாதயாத்திரை சென்று மத்திய பல்கலைக்கழக எம். ஆர். அரங்கில் நிறைவடைந்தது. பேரணியில் தேசிய ஒற்றுமை சுய சார்பு மற்றும் போதைப் பொருள் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஆகிய கருத்துக்கள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் இந்தியா ஒன்று இந்தியா ஒன்றுபட்டது இந்தியா என்றென்றும் ஒற்றுமையாக இருக்கும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். பேரணியில் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?