
புவனியால் வாய் பொத்தி, கண் மலர விழிக்கத்தான் முடிந்தது. அண்ணி மேகலா தொடுக்கும் கேள்விக் கணைகளுக்கு பதில் இல்லை அவளிடம். காதல் கல்யாணம், இத்தனை விரைவில் முடிந்து போகும் என்று யார் எதிர் பார்த்து இருப்பார்கள்?
திருமணமாகி இரண்டு வாரங்களில்,மனம் ஒத்து வரவில்லை, என்று ஒற்றை வார்த்தையில் பதில்; மாதவனை விவாகரத்து செய்வதற்கு அவளுக்கு சரியான பதிலாக இருக்காது. சந்தேகம் கிளை பரப்பி விருட்சமாகும் என்ற பயம்; புவனாவிற்கு.
மாதவனும் இந்த முடிவில் இருந்தது; ஒரு ஆச்சரியம். பணி உயர்வுடன் வந்த ஊதிய உயர்வு.அதைத் தொடர்ந்த நாட்களில்தான் புகைச்சலும், வார்த்தை சாடல்களும்.வேறு காரணங்களும் இருக்குமோ?
காரணமின்றி, ரிசப்ஷன் போது வந்திருந்த அவனுடைய சிநேகிதர்கள் குழுவில் இருந்த பெண்களின் முகம் வந்து போக; திருமண வீடியோவை மீண்டும் பார்க்கத் துவங்கினாள்; புவனி .இதே கேள்வியை புவனி ஏன் தன்னையே கேட்டுக்கொள்ளவில்லை என்பதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை,என்னிடம்
சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?