சடுதியில் வா முருகா

சடுதியில் வா முருகா


சிந்தையில் உறை

செந்தூரா!

சண்முகா!

சடுதியில் வா!

சிங்காரவேலவா!


எண்கண் வாழ் முருகா

என்னை ஏறெடுத்துப் பாராததேன்; முருகா!


எட்டுக்குடி முருகா

எனக்கு எட்டாக்கையாய் இருப்பதேனோ ;முருகா!

 


குன்றக்குடி குடி கொண்ட குமரா!

என் குறை தீர்க்க வாராததேன்; முருகா!


பரங்குன்றம் காத்து நிற்கும் முருகா!

என்னை பரிதவிக்க 

வைப்பதேனோ; முருகா!


திருத்தணிகை கோயில் கொண்ட முருகா!

என்னிடத்தில் கொண்ட கோபம் ஏதென்ன; முருகா!


தென் பழனி ஆண்டிருக்கும் முருகா!

என்னை இன்னும்

ஒரு ஆளாய் நினைக்கலையா; முருகா!


என்ன சொல்லி அழைத்தாலும் முருகா!

ஈராறு செவியிலும்

ஏறாததேன் முருகா!


சாமி மலை வாழ் முருகா!

தேம்பி நிற்கும் என்னை

தேற்றுவாய் முருகா!


சிந்தையில் உறை

செந்தூரா!

சண்முகா!

சீக்கிரமாய் வந்து விடு

சிங்கார வேலா!



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%