கொல்லிமலையில் 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா

கொல்லிமலையில் 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா

நாமக்கல், ஜூலை 12


வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் பசுமை திருவிழாவாக நடைபெற உள்ளது


தமிழ்நாடு அரசின் சார்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 (ஆடித்திங்கள் 17, 18) தேதிகளில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளதையொட்டி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:


வல்வில் ஓரி விழா, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய விழாவாகும். இம்முறை இந்த விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சியுடன் இணைந்து பசுமை திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது.


விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் (2ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3ந் தேதி ஞாயிற்றுக்கிழமை), வல்வில் ஓரி அரங்கில் மாபெரும் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.


விழாவையொட்டி காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து, கனரக வாகனங்களின் செல்லுவதை தடுக்க வேண்டும். தலைகவசமின்றி வரும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.


பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


வனத்துறையினர் தூய்மை பணிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறை குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.


உணவுப்பாதுகாப்புத் துறை உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். கலால் துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட வேண்டும். சுகாதாரத்துறை, மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


மேலும், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கம் சார்பில் வில்வித்தை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த விழா, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் துர்காமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மு.அபராஜிதன்,


கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வ.சந்தியா, (பொது), ராமசந்திரன் (வேளாண்மை), மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈ.எஸ்.முருகேசன் (நாமக்கல் (தெற்கு, வடக்கு (மு.கூ.பொ)), துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%