குறைந்தபட்ச ஊதியம் கேட்டு திருப்பத்தூரில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Dec 10 2025
19
தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி எதிரில் திங்களன்ன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர் திருப்பத்தூர் தலைவர் காசி, செயலாளர் சரவணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், அரசாணை எண் 139, 152 ரத்து செய்து திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய பணப்பயன் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், விவசாய சங்க தாலுகா தலைவர் சிங்காரம் செயலாளர் ஆனந்தன், சிஐடியு கன்வீனர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?