கிருஷ்ணகிரியில் 10 புதிய நகர பேருந்து சேவைகள் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் 10 புதிய நகர பேருந்து சேவைகள் தொடக்கம்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது இயக்கப்பட்டு வந்த மகளிர் விடியல் பயணத்திற்கான பழைய பேருந்துகளுக்கு மாற்றாக, 10 புதிய நகரப் பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன.


கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கொடியசைத்து சேவைகளை தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர், முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) – தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 புதிய புறநகர் வழித்தடங்கள், 5 புதிய நகர வழித்தடங்கள், மேலும் 101 வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றங்கள் என மொத்தம் 109 வழித்தடங்களில் 121 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


இதன் மூலம் 280 கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 4,77,594 பேர் பேருந்து வசதியைப் பெற்று பயன டைந்து வருவதாகவும் அவர் கூறினார்.


மேலும், பழைய புறநகர் பேருந்துகளுக்கு பதிலாக 55 புதிய பேருந்துகள், 44 புனரமைப்புப் பேருந்துகள் என மொத்தம் 99 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதுடன், மகளிர் விடியல் பயணத்திற்கான பழைய நகரப் பேருந்துகளுக்கு மாற்றாக 67 புதிய பேருந்துகள், 23 புனரமைப்புப் பேருந்துகள் மற்றும் 4 தாழ்தளப் பேருந்துகள் என மொத்தம் 90 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%