வேலூர், ஜன
- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் 61-ஆவது ஆண்டு மாடு விடும் திருவிழா புதனன்று (ஜன.21) வெகு விமரிசையாக நடை பெற்றது. 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டி ருந்தனர். அப்போது கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (34) என்ற இளைஞரை காளை மாடு ஒன்று எதிர்பாராத விதமாக முட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக பேரணாம் பட்டு அரசு மருத்துவ மனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழாவின் போது போதுமான பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ததா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா மற்றும் எதனால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அருண்குமாரின் உடல் பிரேதப் பரிசோத னைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை யில், விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?