கால முழுதும்
போராட்டம்
கண்டால் எதற்கும்
ஆர்ப்பாட்டம்
ஞால முழுதும்
மாறாட்டம்
நலமாய்க் காணும்
வீறோட்டம்!
கேட்டால் தானே
கிடைக்குமிங்கே
கேட்கா விட்டால்
செவிடாவர்
நாட்ட மோடு
உழைத்தாலும்
நல்ல செயலைச்
செய்யாரே!
கேட்டுக் கேட்டுப்
பெற்றவையும்
கேளா மல்தான்
முடக்கிடுவார்
ஏட்டில் மட்டும்
எத்தனையோ
எங்கோ முடங்கிப்
போகிறதே!
சொல்லும் சொல்லை
நிறைவேற்றிச்
சொல்லா வற்றை
நிறைவாக்கி
வெல்லும் வகையில்
உழைத்திடணும்
வீறு கொண்டே
திகழ்ந்திடணும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%