காலநிலைக்கேற்ப தட்பவெட்ப மாற்றங்களை தரும் அதிசய கோவில்.....!!

காலநிலைக்கேற்ப தட்பவெட்ப மாற்றங்களை தரும் அதிசய கோவில்.....!!


சோழர்களின் மிகச்சிறப்பான ஆட்சியை மெய்ப்பிக்கும் வண்ணம் அவர்கள் ஏற்படுத்திய நினைவுச்சின்னங்களில் கோவில்கள் மிக முக்கியமானவையாகும். அவற்றில் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியைக் கொண்டுள்ள பிரகதீஸ்வரர் கோவில் முதன்மையானதாகும். இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு நிகரானது என்றால் மறுக்க இயலாது.🌟கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில், 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள்பாலிக்கிறார்.🌟இந்த கோவிலின் சிறப்பு இந்த கோவிலில் அமைந்துள்ள நந்திதான். இந்த நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளது.🌟இங்கிருந்து 200மீ தாண்டி மூலஸ்தானம் உள்ளது. இந்த நந்தி மீது பகலில் படும் ஒளி, அப்படியே உள்ளிருக்கும் தெய்வத்தின் மீது பிரதிபலிக்கிறது.🌟அற்புத சிற்ப வல்லுநர்கள், மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டாலும், வெளியில் இருக்கும் ஒளி பட்டு லிங்கம் ஒளிருகிற மாதிரி வடிவமைத்துள்ளார்கள்.🌟கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இது வெயில்காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் கதகதப்பையும் தரும் சிறப்பு கொண்டது.🌟மயிலாடுதுறையிலிருந்து 42கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. மயிலையிலிருந்து குட்டாலம், திருமணஞ்சேரி, பண்டனல்லூர், கஞ்சன்கொள்ளை வழியாக கங்கை கொண்ட சோழபுரத்தை அடைய வேண்டும்.🌟இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 12மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%