காட்பாடியில் "உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம்" : அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு!
Aug 06 2025
20

வேலூர், ஆக. 7-
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம்" நடந்தது. இந்த முகாமில் காட்பாடி தாராபடவேடு 6வது வார்டு, 7வது வார்டு உள்ளிட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா வன்னியராஜா மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சீனுவாசன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ முகாமில் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?