கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா..
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மாவட்ட செயற்குழு கூட்டம் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பாராட்டு விழா 2026 ஆம் காலாண்டு வெளியீட்டு விழா கடலூர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன்,ஜோதி கலைச்செல்வன், மாவட்ட துணை தலைவர் பாட்ஷா, பொன்முடி,சண்முகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் எழில் முருகன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பழ முருகப் பாண்டியன் மாநில செயலாளர் சாமி செங்கேணி தமிழ் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொருளாளர் வீர முரளிதரன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கருணாகரன், அரியலூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட இணைச் செயலாளர் கணேசன், தீர்மானங்களை முன்மொழிந்தார். இவ்விழாவில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் ஓய்வு பெற்ற நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,குமரகுரு நடராஜன்,ஆகியோர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தேவ முரளி கலந்து கொண்டு சிறப்பு பேருரை நிகழ்த்தினார். விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வித்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழல் ஒன்றியத்தின் மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் முடிவில் மாவட்ட பொருளாளர் சந்தானம் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மோட்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 29.12.2025 அன்று நடைபெறும் கவனஈர்ப்பு போராட்டத்திலும்,
6.1.2026 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாநிலம் முழுவதும் கலந்து கொள்வதென தீர்மானம் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?