சிவந்த கரங்கள் கொண்டாய்.... அள்ளிக் கொடுத்து....
கருவில் சுமந்த தாயாய்....தவித்தவர்களுக்கு...பசி ஆற்றினாய்...
தாய்த் தமிழிற்கு மகுடம் சூட்டினாய்...வெள்ளித்திரையில்...
தமிழர்களுக்கு தலைநிமிர்வை கற்பித்தாய்... தரையில்...
இரும்பும் கனியும்... உன் காந்த விழிப் பார்வையில்....
கார்மேகம் பொழியும் கருணைப் பேச்சில்...
இயன்றவரை மட்டும் அல்ல...
இயலும் என.... நம்பிக்கை ஊட்டினாய்...அறிமுகக் கலைஞர்களுக்கு...
நலத்திட்டங்கள் வழங்கி நலிந்தோர் நலம் பெறச் செய்தாய்...
அரசியலில் அரிதாரம் பூசாத... நட்சத்திரம்..நீ...
வெள்ளை நிறமே... வெட்கித் தலைகுனியும்... கள்ளம் கபடமில்லா...கனிமரம் நீ
அத்தனை கலைஞர்கள் வாழ்வில் இருள் விரட்டிய... கருப்பு சூரியன்...
ஒளி மங்காத... நெருப்புச் சூரியன்...
விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம்....28.12.2025...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?