
கடவுள் தந்த முகப்பூக்கள்
வரப்பிரசாதம்
வரவேற்பறை
தோற்றத்தின்
முதன்மை அங்கமாய்
தோன்றுவது
நல்லது கெட்டது
நன்மை தீமை நாலும்
அறியும்
நளினப்பூக்கள்
மானையும் மீனையும்
சுட்டிக்காட்டும் கலைநயமிது
நாசிக்கு இருபுறமும்
நட்போடு விளங்கும்
விண்மீன்கள்
நெற்றித்திலகம் மின்ன
கருமையிட்ட வண்டுகள்
இவை
இயற்கை அழகு
உறவுகள் சுற்றம்
சுட்டிக் காட்டும் கண்ணாடி
உறங்கும் போதும்
அழகு சிரிக்கும் போதும்
அழகு
அழும்போது நீரால்
நனைந்து குளிக்கும்
கசங்கிய பூவிது
இரண்டு கண்ணும்
பெற்றது இறைவன் செயலாம்
இழந்தவர் வாழ்க்கையை
நினைக்க வருத்தமே மிஞ்சும்
கவனமாய் பாதுகாத்து
கவலைகள் குறைத்து
வாழவேண்டும்
இயற்கையின் முடிவில்
இமைகளும் மூடி
இறுதித் தூக்கம்
உறுதியாகும் வரை
உல்லாசமாய் உலகை
கண்டு களிப்போம்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?