ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னப்பாலத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
தலைமையாசிரியை செல்லம்மாள் தலைமையேற்று சமத்துவ பொங்கல் திருவிழாவை வழிநடத்தினார்.
ஆசிரியை ஞானசெளந்தரி வரவேற்றுப் பேசினார்.
ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் தனது கருத்துரையில், உழவர்கள் தங்களின் உழைப்பின் பலனை இயற்கைக்கு மற்றும் கால்நடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுப் பானையில் புத்தரிசி பொங்கலிடுவதை பற்றி விளக்கிப் பேசினார்.
முன்னதாக, ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தயாரான பொங்கல் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நிறைவாக, ஆசிரியை நிஷா நன்றி கூறினார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை மிக்கேல் ராணி, சந்திரமதி, லாரன்ஸ் எமல்டா, அமுதவள்ளி, நான்சி, பிரிஸ்கிலா, நாகேஸ்வரி போன்றோர் செய்திருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?