கடனாக வாங்கிய ரூ.60 லட்சத்தைக் கேட்ட ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு
Aug 19 2025
15

தாம்பரம்:
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், காமராஜர் சாலையில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம், ரம்யா தம்பதியர். சுப்பிரமணியம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி ரம்யா ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகாமையில் உள்ள சிக்கன் கடைக்கு சுப்பிரமணியன் சிக்கன் வாங்க சென்ற போது, பாஜக பிரமுகர் பழனிவேல் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.
அப்போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், பாஜகவில் பீ்ர்க்கன்கரணை இரும்புலியூர் பகுதி பொறுப்பாளராக பதிவு வகித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியம் மீண்டும் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சென்றார். அப்போது, சுப்பிரமணியை தொலை பேசியில் தொடர்பு கொண்ட பாஜக பிரமுகர் பழனிவேல் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி, ரூ.20 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் வாங்கி உள்ளார்.
அதுமட்டுமின்றி, விஜயலட்சுமி, கணேஷ் என பலரை அறிமுகம் செய்து மொத்தம், ரூ. 60 லட்சத்தை பழனிவேல் மோசடி செய்து உள்ளார். பணத்தை இழந்த சுப்பிரமணியின் மனைவி ரம்யா நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பழனி வேலிடம் பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது, பழனிவேல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இடத்தை பத்திரப் பதிவு செய்து தருவதாகக் கூறி, மணிமங்கலம் அருகே ஒரு இடத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளார். அரசுக்கு சொந்தமான இடம் அந்த இடத்தை பார்த்தபோது அது அரசுக்கு சொந்தமான இடம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ரம்யா தனது கணவரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து, பழனிவேலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தர வேண்டிய பணத்தை கேட்டனர். அப்போது, பணத்தைத் தராமல் அலுவலகத்தில் இருந்த கூட்டாளிகளை வைத்து ரம்யா கண் முன்னே கணவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் ரம்யா அளித்த அளித்தார். அதன் பேரில், பழனிவேல் மீது பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?