அதிசயமா அதிசயமா...
அவன் திரும்பி பார்க்கிறான்
ஆனந்தமா வாழ்ந்த நாட்கள்
நினைத்து பார்க்கிறான்!
கனவு போல வாழ்ந்த நாளை
தேடிப் பார்க்கிறான் விவசாயி
ஒற்றையடி பாதை எல்லாம்
ஓடிப் பார்க்கிறான்!
காடு மேடு கரையெல்லாம்...
சுத்தி சுத்தி பார்க்கிறான்
கரைந்து போன அழகை
எல்லாம் தேடி பார்க்கிறான்!
நாளும் ஓடி குளிச்ச நதியில்...
வெறும் நாணல் பார்க்கிறான்
அனு தினம் நீர் எடுத்த
கேணியில புதர் பார்க்கிறான்!
திண்ணை வைத்த வீடெல்லாம்
சுற்று சுவர் பார்க்கிறான்
கோலம் போட்ட வாசல் எங்கும்
தார் ரோடு பார்க்கிறான்!
புஞ்சை நஞ்சை பூமியெல்லாம்
வெறும் புழுதி பார்க்கிறான்
கண்மாய் வாய்க்கால் எங்கும்
கானல் நீரு பார்க்கிறான்!
ஏரிக்கரை எலந்தை எல்லாம்...
கரையில கருக பார்கிறான்
களத்து மேட்டில் முள் முளைச்சி
கட்டாந்தரை பார்க்கிறான்!
தேரு போன வீதி எல்லாம்
சிமெண்ட் தரை பார்க்கிறான்
ஓலை வேய்ந்த குடிசை எல்லாம்
உயர்ந்த ப்ளாட் பார்க்கிறான்!
நாத்து நட்ட வயல் எல்லாம்...
ரியல் எஸ்டேட் பார்க்கிறான்
ஒரு கிராமத்து விவசாயிதான்
நகரத்து நகரம் பார்க்கிறான்!
ஜெ.ம.புதுயுகம்
பண்ணந்தூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?