" அப்பாவி மக்களின்
வாக்கில் அதிகாரம்
காட்டும் அரசியல்வாதிகள்
ஆதிக்கம் மொய்க்க
தொடங்கிவிட்டது .."
இவர் வந்தால்
இது நடக்கும்
அவர் வந்தால்
அது நடக்கும்
கனவு உலகில்
அப்பாவி மக்கள் ....."
எதுவுமே நடக்கவில்லை
என்பது மட்டும்
தான் உண்மை ..."
ஊழல் மட்டுமே
தாரக மந்திரம்
சொத்து மட்டுமே
உயரிய நோக்கம் .... "
ஜனநாயகம்
பல கோணங்களில்
சறுக்கல் கண்டு
பிணநாயகமாக
தான் உள்ளது ..."
பத்தில் இரண்டை
அமுக்கினால்
தெரியாது
பத்தில் எட்டை
அமுக்கினால்
என்ன செய்வது ..."
ஓட்டை போட்டால்
ஆட்டை போடும்
காலமாகி விட்டது ..."
ஸ்டிக்கர் ஒட்டும்
காலம்
அரசியல் விழிப்புணர்ச்சி
மறைந்து
காழ்ப்புணர்ச்சி
தலை விரித்து
ஆடும் காலம் ... "
என்று தணியும்
இந்த தாகம்
கேள்விக் குறியில்
எதிர்காலம் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?