கருவறை அறிவு
யார் அறிவார்?
எவருக்கும் இல்லை;
கல்லறை அறிவும்;
எவருக்கு உண்டு?
இவரும்,அவரும்,
இருப்பையும்,இறப்பையும்,
இங்கும், அங்கும்,
பேசிப் பேசி,
சொல் பெருக;
அதன் அர்த்தம்
அனைத்தும்
அனர்த்தமாய்;
அனைவரின் மனதிலும்
பாரமாய்
ஏற்றியான பிறகு
இறப்பின் அச்சம்
இருப்பின் காலம்
முழுவதும் .
இவனின் பயம்
கல்லறையின் கன சுவரில்லை .
சட்டகத்திலிருந்து விடுதலையான ஆத்மனை நினைத்து இங்கிருக்கும் போதே;
பயத்திலும், கண்ணீரிலும்.
நனைந்து திண்டாடும்
மனித மனம்.

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%