என்னைப்பாடச் சொன்னால்

என்னைப்பாடச் சொன்னால்

*என்னைப்பாடச் சொன்னால் (கொஞ்சம் சிரிங்க*)

--------------------------*என்ன பாடத் தோன்றும்?*

--------------------------

*நம் சமூகத்தில் உள்ள பல பேர்களிடம் ஒரு சினிமா பாட்டு பாடச் சொன்னால் அவர்கள் என்ன பாட்டு பாடுவார்கள் என்று ஒரு கற்பனை. இதோ கீழே.*


*ENT டாக்டர்* : காதோடுதான் நான் பாடுவேன்.


*கண் டாக்டர்* : பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல் வேண்டுமோ.


*ஆர்தோ டாக்டர்* : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர்ப் பாதம் நோகும்.


*இதய டாக்டர்* : என்னதான் ரகசியமோ இதயத்திலே.


*குழந்தை நல டாக்டர்* : இது குழந்தை பாடும் தாலாட்டு.


*மகப்பேறு டாக்டர்* : காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்.


*இஸ்ரோ விஞ்ஞானி* : நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன்.


*தபால்காரர்* : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்.


*பூக்கடைகாரர்* : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ. 


*தீயணைப்பு அதிகாரி* : அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு.


*கூகுள் அலெக்சா* : உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.


*கரப்பான் பூச்சி* : இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்.


*விமான பைலட்* : பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.


*ஓட்டல் உரிமையாளர்* : கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.


*கணக்கு வாத்தியார்* : வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா.


*சோசியல் ஸ்டடிஸ் வாத்தியார்* : மதுரையில் பறந்த மீன் கொடியில் உன் கண்களைக் கண்டேனே.


*PT வாத்தியார்* : பறக்கும் பந்து பறக்கும் அதுபறந்தோடி வரும்போது.


*டிராயிங் மாஸ்டர்* : சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி.


*ஏர்டெல் நெட்வர்க்* : நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ.


*சில்லரை வியாபாரி* : இந்த புன்னகை என்ன விலை?.


*AC மெகானிக்* : ஜில் என்று காற்று வந்ததோ




*லால்குடி வெ நாராயணன்* 

SBIOA UNITY ENCLAVE MAMBAKKAM CHENNAI 600127

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%