எடப்பாடி பழனிசாமி 2ம் கட்ட பிரசாரம் ஜூலை 24ல் துவங்குகிறார்

எடப்பாடி பழனிசாமி 2ம் கட்ட பிரசாரம்  ஜூலை 24ல் துவங்குகிறார்


சென்னை, ஜூலை 14-

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறார். 36 தொகுதிகளில் பேசுகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கினார். வரும் 21-ம் தேதியுடன் அந்த பிரசாரம் முடிவடைகிறது. இதில் அவர் மொத்தம் 33 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

இந்நிலையில் வரும் 24-ம் தேதி, 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஆக.8-ம் தேதி முடிக்கிறார். 24-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளிலும், 25-ம் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளிலும், 26-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை தொகுதிகளிலும், 30-ம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடணை ஆகிய தொகுதிகளிலும், 31-ம் தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஆக.1-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, 2-ம் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், 4-ம் தேதி பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 5-ம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, 6-ம் தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, 8-ம் தேதி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 2-ம் கட்ட பிரச்சாரத்தில் மொத்தம் 36 தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்வார் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%