எங்க ஊரு எங்க கோயில் சிறப்பு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நாப்பிராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஊத்தங்கரையில் இருந்து சுமார் 3 கி மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இக்கோயிலில் விநாயகர் ஆலயம், மாரியம்மன், நாகாத்தம்மன், பலிபீடம் மற்றும் வேடியப்பன் போன்ற சுவாமி அமைந்துள்ளது.மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோயில்.
கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த அம்மன் சுமார் 5 தலைமுறைக்கு முன்பே அமைந்த ஒரு திருத்தலம். நமக்கு ஒரு கஷ்டம் என்று கோவிலில் இருந்தோ அல்லது எங்கு இருந்து வேண்டிணாலும் அந்த அம்மா நம்முடைய பிராத்தனை நிறைவேற்றும். முன்னோர்களிடம் அம்மன் நேராக நின்று பேசியதாக கூறப்படுகிறது.அதாவது உதாரணமாக நான் என் அப்பா என் தாத்தா அவர்களுடைய அப்பா அம்மா என்று இப்படி நான்கு தலைமுறைக்கு முன்னர் ஊரில் காலரா நோய் என்ற வந்ததாம். அப்போது அதிகமாக மக்கள் இறந்து விட்டனர் அந்த அம்மாவிற்கு ஆறு பசங்க இதில் ஐந்து பேர் இறந்துவிட்டார்.எல்லா பசங்களும் இறந்துடாங்க இருப்பது ஒருவர் நாமும் ஊரைவிட்டு போகலாம் என்னும் போது இந்த அம்மன் நேரடியாக வந்து காட்சி தந்தன.நான் இருக்கிறேன் என்று சொன்னதாம் நீ போக வேண்டாம் உன் குடும்பத்தை நான் காப்பாத்துகிறேன் என்றதாம். இந்த அம்மன் ஆதிகாலத்தில் ஒரு காடு போன்று அடர்ந்த வனத்தில் இருந்து. அவ்வளவு ஒரு இயற்கை நிறைந்த வளமும் செழித்து காணப்பட்டது.இந்த அம்மனுக்கு 2014ம் ஆண்டு நிர்வாகம் சார்பில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 2016ம் ஆண்டு ஆவணி 5ம் தேதி கும்பாபிஷேகம் மிகவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.கோவிலுக்கு ஒரு மிக பெரிய சிறப்பு உண்டு .அது என்னவென்றால் கோவிலின் வெளிப் பகுதி இடது மற்றும் வலது ஆகிய இரு புறமும் இரண்டு பெரிய தூண்கள் போன்று மரங்கள் அமைந்துள்ளது. இந்த மரத்தின் பெயர் கீரி மரம் என்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த மரத்தினை ஆராய்ச்சி செய்தன அப்போது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வளந்த மரம் என்று ஆராய்ந்து பார்த்து சொன்னார்கள். கோவிலின் வெளியே இரண்டு துவாரபாலகர்கள் இருப்பது போல் இந்த மரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த கோவிலுக்கு பெருமை மரம் ஒன்றே போதும்.இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதப்படுகிறது. இந்த கோவில் மொத்த குடும்பம் ஒன்பது ஆகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பூஜை நடைபெறுகிறது.நாம் எவ்வளவு கவலை என்று வந்தாலும் கோவிலில் சிறிது அமர்ந்து இருந்தாள் போதும் கவலை அனைத்தும் போக்கிவிடும்.நாம் நினைத்த காரியங்கள் கைகூடி விட்டால் நேர்த்திக்கடணாக சூரைத்தேங்காய், கோழி,ஆடு மற்றும் நகை போன்ற மற்ற பொருட்களை செலுத்துகின்றன.அம்மனை தரிசித்து சென்றவர்களுக்கு பல அற்புதங்கள் நடந்துள்ளது . மேலும் அம்மனின் அருள் பெற்று அனைவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று அம்மன் ஆசி பெற்ற வேண்டி கொள்கிறோம் நன்றி.
இப்படிக்கு,
கி. சிவசக்தி ,
நாப்பிராம்பட்டி,
ஊத்தங்கரை.