திடமான தேகத்தை
பெற்றிருப்பதே
சுறுசுறுப்பு நெருப்பில்
சோம்பலைச்
சாம்பலாக்கி முன்னேற்றப் பாதைகளில்
கோலமிடத்தான்!
ஓய்வு என்பது
ரணங்களுக்கான
ஒத்தடமே தவிர
வாழ்க்கையன்று!
உழைப்பென்னும்
அச்சாணியின்
உறுதியில் தான்
வாழ்க்கைச்சக்கரம்
சுழல்கிறது!
பிரம்மனின்
படைப்பையே
திருத்தி அமைக்கும்
வல்லமை உழைப்பாளிக்கு உண்டு!
ஊர்ந்து செல்லும்
எறும்புகளையும்
கடும் வெயிலில்
உழுதிடும்
காளைகளைப்
பார்த்தாலாவது சும்மா
இருப்பவர்களுக்குச்
சுரணை பிறக்கட்டும்!
மே முதல்நாளை
வசந்தத்தின்
திருநாளாய்க்
கொண்டாடுவோம்!
வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக
ஆனந்தமுள்ளதாக
அழகானதாக
வடிவமைத்தவர்களின்
வண்ணத்திருநாள்!
முயற்சிகளால்
வியர்வையும்
செந்நீரும் சிந்தி
முட்டுக்கட்டைகளைத்
தகர்த்திட்டால்
முன்னேற்றம்
தொலைவில் இல்லை!
கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?