உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்:

உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்திருந்தார். அதேநேரத்தில், டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும்.” என கடந்த வாரம் அதிபர் மாளிகை அறிவித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்க ட்ரம்ப் முன்வந்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%