இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட அமைதி வாரியம் தொடங்கினார் ட்ரம்ப்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட அமைதி வாரியம் தொடங்கினார் ட்ரம்ப்


 

டாவோஸ்: இஸ்​ரேல்​ - ஹ​மாஸ் இடையி​லான போர் நிறுத்​தத்தை மேற்​பார்​வை​யிட ‘அமைதி வாரி​யம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் சுவிட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகரில் முறைப்​படி தொடங்கி வைத்​தார்.


டாவோஸ் நகரில் நடை​பெற்று வரும் உலகப் பொருளா​தார மன்ற மாநாட்​டில் இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்​பில் இணைய அனை​வரும் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். வருங்​காலத்​தில் ஐக்​கிய நாடு​கள் சபைக்கே இது சவாலாக விளங்​கும். இருப்​பினும், அமெரிக்​கா​வின் முக்​கிய நட்பு நாடு​கள் பல இந்த அமைப்​பில் சேர மறுப்புத் தெரி​வித்​துள்​ளன.


காசா முனை​யின் எதிர்​காலத்தை வடிவ​மைக்​கும் நோக்​கில் இந்​தத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இது அமெரிக்​கா​வுக்​கானது மட்​டுமல்ல, உலகுக்​கானது. காசா​வில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற உலகப் பிரச்​சினை​களுக்​கும் இந்த அமைப்பை விரி​வாக்​கம் செய்​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.


50 நாடுகள் கையெழுத்து: அசர்​பைஜான் முதல் பராகுவே வரை சுமார் 59 நாடு​கள் இதில் கையெழுத்​திட்​டுள்​ள​தாக தெரி​வித்த டிரம்ப், அங்கு கூடி​யிருந்த தலை​வர்​களை நோக்​கி, “நீங்​கள் உலகிலேயே அதி​காரம் மிக்​கவர்​கள்; எனது நண்​பர்​கள்” என்று குறிப்​பிட்​டார். அமெரிக்​கா​வின் மிக நெருங்​கிய நட்பு நாடு​களான பிரிட்​டன், பிரான்​ஸ், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடு​கள் இந்த அமைதி வாரி​யத்​தில் இணைய மறுத்​து​விட்​டன.


முடிவெடுக்காத இந்தியா.. இந்​தி​யா, சீனா, சிங்​கப்​பூர், தாய்​லாந்து உள்​ளிட்ட நாடு​கள் இந்த அமைப்​பில் சேரு​வது குறித்து இன்​னும் முடி​வெடுக்​க​வில்​லை.


அமைதி வாரிய தொடக்க நிகழ்​வில் அமெரிக்க வெளி​உறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ, அதிபரின் மரு​மகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபி​யா, அர்​ஜென்​டினா, இந்​தோ​னேஷியா உள்​ளிட்ட நாடு​களின் பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொண்​டனர்.


இதற்கிடையே, நேற்று இரவு நடை​பெற்ற தலை​மைச் செயல் அதி​காரி​களுக்​கான வரவேற்பு மற்​றும் இரவு விருந்து நிகழ்ச்​சி​யில் ட்ரம்ப் பேசும்போது, ‘‘என்​னால் நம்​பவே முடிய​வில்​லை. வழக்​க​மாக அவர்​கள், என்னை ஒரு பயங்​கர​மான சர்​வா​தி​காரி போன்​றவர் என்பார்​கள்.


நான் சர்​வா​தி​காரி​தான். ஆனால் சில நேரங்​களில் ஒரு சர்​வா​தி​காரி தேவைப்​படு​கிறார். ஆனால் இந்த விஷ​யத்​தில் அவர்​கள் என்னை அப்​படி கூற​வில்லை” என்​றார். டாவோஸில் இருந்து புறப்​படும் முன்பு ட்ரம்ப் கூறியபோது, ‘‘நான் இங்கு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கியை சந்​தித்​து பேசினேன். விரை​வில் புதினை​யும் சந்​திப்​பேன்​. என்​னைப்​ பொறுத்தவரை போர் முடிவுக்கு வரவேண்டும்’’ என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%