
திருவண்ணாமலை, ஜூலை 19-
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.கலெக்டர் தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது-
தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளும்,நவீன ஆய்வகங்களும் கட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவர்களின் தனிப்பட்ட திறன்களையும் வளர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக உள்வாங்கி அதை தலைமை ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தினாலே நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆங்கிலமும், தமிழும் கற்க வேண்டும் தாய்மொழியான தமிழ் மொழியை கற்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில், உதவி ஆட்சியர் பயிற்சி அம்ருதா எஸ்.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?