இனிதே துவங்கும் நாள்

இனிதே துவங்கும் நாள்

🌹🌹


காலை புலர்ந்ததும்

கண்ணாடி தேடி

கண்ணில் ஒத்தி

காலை வணக்கம் 

முதியவர் குழுவில்...

ஒரு முறைமை விசாரிப்பை தவிர்த்தாயிற்று.

செவி கருவியை

செவியில் செலுத்தி,

பிறந்த மக்களுக்கு

'நலம்' சொல்லியாயிற்று.

கால்களை மெதுவே

முழுகாலணி உறைகளில் 

நுழைத்து, நடப்பானை நகர்த்தி

நாலு அடி எடுத்து வைக்க;

வியர்வை ஆறாம் பெருகி

அருவியாய் பொங்கி வர;

நடப்பதுதான் வாழ்வா?

வாழ்வை நான் நடத்துகிறேனா?

வாழ்க்கை என்னை நடத்துகிறதா?

என்பதில் குழம்பினேன்.

' என்னடா வாழ்க்கை இது;'

மனம் அலுக்க,

கண்ணில் 

நீர் சோர;

சமையல் சுப்புலட்சுமியும்

மேல் வேலை மீனாவும்

வருவார்களா,

மட்டம் போடுவார்களா;

என்ற மெல்லிய கவலையில் வீடு தந்து சேர,வாயிலில் 

மகனும் மருமகளும்

காத்திருப்பது கண்டு

இனிதே துவங்கியது 

இந்நாள்.



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%