ஆகாயம் ஆனந்தம்.

ஆகாயம் ஆனந்தம்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆகாயப் பூங்காற்றில் 

ஆனந்தம் கொள்வோமே. 


காற்றடிக்கும் திசையில் 

களிப்போடு பறப்போமே. 


விண்வெளி எங்கும் தன்னிலை துறந்தே. 


கனிந்திடும் காதலில் காந்தமாய் கவர்ந்தே.


ஊஞ்சலாடும் உள்ளங்கள் 

ஒன்றில் ஒன்றாகுமே.


கையோடு கைகோர்த்து 

கலியுகம் மறப்போமே.


விஞ்ஞானம் வியக்கும் 

மெய்ஞானம் விழிக்குமே


பூலோகம் தொலைத்து

மேலோகம் சேர்வோமே


வானவில்லைத் தேடியே

வானுல்கில் அலைவோமே


விண்மீன்கள் வட்டமிட்டு

நம்மோடு விளையாடுதே


ஆகாயத்தில் மிதந்து 

ஆசைகள் வெல்வோமே.


நேசக்கரங்கள் பற்றியே 

நிலவொடு மகிழ்வோமே.



கவிஞர். வடுவூர்.

சீ. திருநாவுக்கரசு.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%