கால்களை வருடிச்
செல்லும் வெண்மேகம்
காற்றின் வேகத்திற்கு
தனை மாற்றி
கடலின் உயரத்தைத் தொடும்
கரையில் கட்டிய மணல் வீட்டைச் சேதப்படுத்தி
மகிழ்ச்சி காணும்
ஒலியோடு உலா வந்து
உற்சாகத்தை ஏற்படுத்தும்
பொங்கிப் பெருகி ஊற்றெடுத்து
சங்கும் சிப்பியும்
உடன் அழைத்து
கரைக்கு வந்து
அமைதி காக்கும்
சீற்றம் சிறிது அதிகமானால்
சுனாமியாகி உள்வாங்கும்
போற்றுதலுக்குரிய இயற்கையாகி
பொறுமை காத்துத்
தனை மாற்றும்
தன்நிலை அறிந்து
இடம் கண்டால்
மகிழ்ச்சிக்கு என்றும் குறையில்லை
கடலின் ஆழம் கால்கள் கண்டால்
உடலில் உற்சாகம் தானாகும்
ஆழம் அறியாது கால்கள் சென்றால்
கடுந் துயர் தானே
வாழ்வில் வரும்
கடலின் அலைக்கு
கரைகள் என்றும்
துணை இருக்கும்
மனதின் அலைக்குத் துணையின்றி
மானுடர் சிலரும் தவிக்கின்றார்
நல்ல குணமும் நமக்கிருந்தால்
நல்துணையாய் நாமும் வாழ்ந்திடலாம்.
*************************************
தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?