அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


 

1. ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து இசையைக் கேட்பதால் வயதான காலத்தில் மறதி ஏற்படும் வாய்ப்பு 39 சதவீதம் குறைவது தெரிய வந்துள்ளது.



2. கிவி பழம், கேழ்வரகு, அதிக தாதுக்கள் நிறைந்த தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமை யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



3. க்ளைசி 251 நட்சத்திரம், பூமியிலிருந்து 18 ஒளியாண்டுகள் தொலைவில், மிதுன ராசி மண்டலத்தில் அமைந்துள்ளது. பூமியைப் போன்ற இரண்டு கிரகங்கள் இதைச் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.



4. மின் கம்பங்கள் வழக்கமான வடிவங்களில் இருந்தால் ரசிக்கும்படியாக இல்லை என்பதால் விலங்கு, பறவைகளை போல் ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் வடிவமைத்து உள்ளனர். இது, உலகெங்கும் வரவேற்பு பெற்றுள்ளது.



5. பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் உடைந்து, அவற்றின் பாகங்கள் விண்வெளியில் மிதந்து கொண்டு உள்ளன. இவை, புதிதாக நிலை நிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள் மீது மோதக் கூடும். எனவே, இவற்றை காப்பதற்கான புதிய வலிமையான கவசத்தை, 'அடாமிக் 6' எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.


வந்துவிட்டது இந்தியாவின் முதல் தானோட்டி ஆட்டோ 


இந்தியாவில் முதல் 'தானோட்டி' வாகனம் சாலைக்கு வந்தேவிட்டது. அதை சாதித்திருப்பது டில்லியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ நிறுவனம் தான். ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்து வந்த மின்சார ஆட்டோவில், தானோட்டி தொழில்நுட்பத்தை இணைத்து, 'சுயம்கதி' என்ற தானோட்டி ஆட்டோவாக வெளியிட்டிருக்கிறது. பயணியருக்கான தானோட்டி ஆட்டோவின் விலை 4 லட்சம் ரூபாய். ஒரு தடவை சார்ஜ் செய்தால் 120 கி.மீ., துாரம் ஓடும்.



சுயம்கதி, சுயமாக ஓடுவதற்கான 'அட்டானமஸ் டிரைவிங்' நுட்பத்தில் பெரும் பங்கு வகிப்பது, மென்பொருள் தான். அதை, ஒரு பெங்களூரு நிறுவனத்திடம் இந்த நிறுவனம் ஆட்டோ வாங்கியிருக்கிறது. 'டிரைவர்லெஸ்' நுட்பத்தின் வன்பொருட்களான காட்சி உணரிகள், தடை உணரிகள் போன்ற உதிரிபாகங்கள் 'மேக் இன் இந்தியா'விலேயே கிடைக்கின்றன. ஆனால், லிடார் என்கிற லேசர் கதிர் மூலம் இடவலம், முன்பின் உணரும் கருவி நிச்சயம் இறக்குமதி தான்.



ஒரு நகரின் மொத்த சாலைகளையும் மனப்பாடம் செய்து, நெரிசல் இல்லா சாலையை தேர்ந்தெடுத்து, பயணியருடன் பேசியபடியே ஓட்டும் சாதுரியம் சுயம்கதி ஆட்டோவுக்கு இன்னும் வரவில்லை. ஆனால், அதுவரை விமான நிலையம், மால்கள், தொழில் பூங்காக்கள் போன்ற வளாகங்களுக்குள் வருவோரை சுமந்து செல்ல சுயம்கதி பயன்படுத்தப்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%