திருவில்லிபுத்தூர், டிச. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வையொட்டி திருக்குறள் தொடர்பான அறிவுசார் போட்டி கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு உருவகக் கட்டுரை, வினாடி வினா, விவாதமேடை என மூன்று போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.4,500, இரண்டாம் பரிசு ரூ.3,500, மூன்றாம் பரிசு ரூ.2,500 மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்படுகிறது. இதனையொட்டி செவ்வாயன்று திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக திருக்குறள் உருவகக் கட்டுரை தொடர்பாக தனி மனித ஒழுக்கம், நீர் மேலாண்மை மற்றும் ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பின் கீழ் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். நிகழ்வின் தொடக்கமாக கணிதவியல் துறைத் தலை வரும் பொறுப்பு முதல்வருமான அமுதா தலைமை வகித்தார். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிவகாசி அரசு கல்லூரி தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளர் இராஜேஸ்வரி மதிப்பீடு செய்தார். இதில் தமிழ்த் துறை பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?