அமெரிக்காவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 80-ஐ கடந்தது

அமெரிக்காவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 80-ஐ கடந்தது

டெக்சாஸ், ஜூலை 7-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகா ணத்தின் கெர் கவுண்டி என்ற பகுதியில் ஜூலை 4 அன்று ஏற்பட்ட பெரும் மழை வெள் ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. மலைகள் நிறைந்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கெர் கவுண்டி பகுதி கோடைகால முகாம்கள் அமைக்கும் பிரபலமான இடமாக இருந்து வருகிறது. கோடைக்காலத்தில் இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் முகாம் அமைத்து பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அவ்வாறு முகாம் அமைத்திருந்தவர்கள் கனமழையால் அப்பகுதியில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் மட்டும் 28 பள்ளிக்குழந்தைகள் உட்பட 68 நபர்க ளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அம் மாகாணம் முழுவதும் 82 நபர்கள் பலியாகி யுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 41 பேர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள் ளது. எனினும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிக ரிக்கும் என மாகாண அதிகாரிகள் எச்ச ரித்துள்ளனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால முகாமில் இருந்த பத்து மாண விகள் மற்றும் அம்முகாமின் ஆலோசகர் ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையையும் மீட்புப்பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த பேர ழிவு 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்த பகுதிகளை அவர் வெள்ளியன்று பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%