அதிமுக திராவிட இயக்கம் அல்ல: வைகோ

அதிமுக திராவிட இயக்கம் அல்ல: வைகோ


மதுரை,ஜூலை 9

அதிமுகவை திராவிட இயக்கமாக பார்க்கவில்லை என வைகோ கூறினார். 

மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி-

 இந்துத்துவா சக்திகளை தடுக்கும் நோக்கில் திருச்சியில் செப்., 15-ல் நடக்கும் அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் திரண்டு, வரலாறு படைக்கவேண்டும். எங்களது தொண்டர்களிடம் காசு இல்லை என்றாலும், , போஸ்டர், சுவர் விளம்பரங்களை செய்து அழைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மண்டலம் வாரியாக செயல்வீரர் கூட்டம் நடத்துகிறோம். 

 திமுக கூட்டணியில் தொடர்ந்து தொடருவோம். அவ்வியக்கத்தை காக்கவே பக்க பலமாக உடன்படுவோம். கூட்டணியில் உறுதியாக இருப்போம். வசதியின்றி இருந்தாலும் 1994 முதல் எங்களது தொண்டர்கள் வீறு கொண்டு உணர்ச்சியோடு இயக்கத்தில் பணிபுரிகின்றனர். யாராலும் வீழ்த்தவும், தவிர்க்கவும் முடியாத கட்சி மதிமுக. சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதியில் போட்டியிட்டால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் 10 அல்லது 11 சீட் கேட்க வேண்டி சூழல் வரலாம் என, கருத்து உள்ளது. ஆனால் , 25 தொகுதிகளை மதிமுக கேட்க இருக்கிறது என, ஒரு அறைக்குள் உட்கார்ந்து கற்பனையில் எழுதுவது தர்மம் அல்ல. 


அதிமுகவை திராவிட இயக்கமாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. அக்கட்சி தவறு செய்கிறது. எந்த சுற்றுப்பயணத்தாலும் அக்கட்சிக்கு பலன் கிடைக்காது. கலையுலகில் இருந்து வந்த நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் என்றே அவர் பற்றி நான் கருத்து சொல்ல முடியும். திமுக ஆட்சியில் தவறு எதுவும் நடக்கக்கூடாது என, முதல்வர் எச்சரிக்கையாக இருக்கிறார். அந்த நல்ல லெண்ணத்தில்தான் மதுரை மாநகராட்சி விவகாரத்தில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாக பார்க்கிறேன். கடலூர் ரயில்வே சம்பவம் கஷ்டம் அளிக்கிறது. இது போன்ற விபத்துக்களை தடுக்க ரயில்வே அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%