அதிமுகவின் நிலைப்பாடு என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

அதிமுகவின் நிலைப்பாடு என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்காமல் இருப்பதாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னு டைய ‘எக்ஸ்’ தளப் பதிவில், “பச்சைத்துண்டு போட்டுக் கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆதரவு தரப் போகிறாரா பழனிசாமி” என்றும் கேட்டுள்ளார். காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, திட்டத் திற்கு இந்தியில் பெயரிட்டிருப்பதாகவும், இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு இதை எதிர்க்க தயக்கம் காட்டுவது ஏன்? திட்டத்துக்கான நிபந்த னைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க, நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக ஏற்றுக்கொள்கிறதா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடும் உங்கள் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் எதற்கு, என்று நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%