38 மாவட்டங்களில் இதுவரை 72 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன
Oct 25 2025
87
சென்னை, அக். 24–
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5,000 பனை விதைகள் எனக் கணக்கிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடும் “பனை விதை நடும் நெடும்பணி – 2025” கடந்த செப்டம்பர் மாதம் 16–ம் தேதி துவங்கி மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 23 வரை, 38 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு இணைந்து இதுவரை 72 லட்சம் பனை விதைகள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விதை நடும் செயலும் “உதவி ( Udhavi.app/panai ) செயலி” மூலமாகபுகைப்படத்துடன், அட்சரேகை–தீர்க்கரேகை (Geo-Tag) இணைத்து பதிவேற்றப்படுகிறது. இதன் மூலம் நடவு செய்யப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்யவும், முளைத்த பனை கன்றுகளை பராமரிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பனை விதை நடும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழலோடு இணைந்த மரமாகும்.
பனைமரத்தின் சிறப்புகள்:
தமிழ்நாடு அரசு 33% பசுமையாக மாற்றும் இலக்கை நோக்கி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பனை மரம் இதற்கான இயற்கைத் தீர்வாக விளங்குகிறது— மண், நீர், காற்று, பல்லுயிர் அனைத்தையும் ஒருங்கே காப்பது இதன் சிறப்பு. பனை மரத்திலிருந்து விழும் விதைகளை நீர்நிலை பகுதிகளில் விதைத்து “உதவி செயலி ( Udhavi.app/Panai )” மூலம் பதிவுசெய்யலாம். இதன் மூலம் அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?