*வந்தவாசி ஸ்ரீ கோதண்டராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா...!*

*வந்தவாசி ஸ்ரீ கோதண்டராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா...!*



வந்தவாசி, அக் 27:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், லஷ்மி நாராயண பூஜை, கலச பூஜை நடைபெற்றது. பிறகு முதல் கால இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு பூஜிக்கப்பட்ட கலச நீர் கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. இந்த வைபவத்தில் ஆரணி எம்பி எம்.எஸ். தரணி வேந்தன், எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார், நகர செயலாளர் தயாளன், நகர் மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் கனிக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் பாகவத கோஷ்டியினரின் திவ்யப் பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. பிறகு சீதா - ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பிறகு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். இந்த வைபவத்தை ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%