
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில் மண்டலாபிஷேக விழா ( ஆவணி 5 ) வியாழக்கிழமை காலை 7:35 மேல் 10:30 மணிக்குள் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத வெங்கடாசலபதி சுவாமிக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மண்டலாபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் பக்தபெருமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் மாலை 6:30 மணியளவில் கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%