ஸ்டான்லியில் பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்

ஸ்டான்லியில் பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்


சென்னை, ஜன.


‘‘நான் சிறுவயதில் இருந்தே வாரத்திற்கு 2 முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். இப்போது இந்த கருத்தரங்கத்தின் மூலம் பழைய சோறு மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் அறிந்தபிறகு வாரத்தின் 7 நாட்களும் பழைய சோறு சாப்பிடுவது என்பது நான் முடிவு செய்திருக்கிறேன்’’ என்று அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்’’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:–-


குறிப்பாக நார்ச்சத்துக்கள் 631% அதிகமாகவும், எதிர்ப்பு மாவு சத்து 270% அதிகமாகவும், புரதச்சத்து 24% அதிகமாகவும் நுண் சத்துக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், வைட்டமின் - பி சத்துக்கள் இருக்கிறது. மேலும், இரும்பு சத்துக்களை 12 மடங்கு அதிகமாக உடலில் எடுத்துக் கொள்ள செய்கிறது. பழைய சோற்றில் இருக்கும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் குடலில் சேர்ந்து 2,000 மேற்பட்ட உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.


பழையசோறு தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: புற்றுநோய் வராமல் தடுப்பது, நீரிழிவு நோய் வரமால் தடுப்பது, குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வதால் குழந்தை நன்றாக வளர்கிறது. குறை பிரசவம் வெகுவாக குறைகிறது, கர்ப்பகால நீரிழிவு நோய் வருவது குறைகிறது.


கர்ப்பகால அதிக உயர் இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இருதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது, இரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஒரு அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது.


பழையசோறு பல்வேறு வகையான வயிற்றுப்போக்கு நோய்கள், கிருமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட நோய்க்குறி, வயிறு வீக்கம் மற்றும் வாயு பிடிப்பு போன்ற நோய்களிலிருந்து குணமாவதற்கு உதவுகிறது. இப்படியாக உடல் நலத்திற்கு பாதுகாப்பான மிகச் சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது.


ரூ.2.50 கோடியில்


ஆராய்ச்சித் துறை துவக்கம்


இதன் முக்கியத்துவம் கருதி ரூ.2.44 கோடி செலவில் 11.3.2022 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை” தொடங்கப்பட்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பழைய சோறு சிகிச்சை மூலம் இரைப்பை சிகிச்சைமேற்கொண்டவர்களிடமும் உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.


இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.44 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது.


குடலில் ஏற்படுகிற புண் நீண்ட நாட்களுக்கு பிறகு புற்று நோய் என்ற புது வடிவத்தோடு ஒரு பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே அந்த புண்னை சரி செய்வதற்கு பழைய சோறு காரணமாக இருப்பதால் எல்லோருமே இதனை உட்கொள்வது நல்லது. இதனால் பல நன்மைகள் உள்ளது. நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.


அதையும் தாண்டி காலையில் இதனை எடுத்துக்கொள்ளும்போது தாய்மார்களுக்கு சமைக்கிற பணி என்பது 100 சதவீதம் குறைகிறது. இதனால் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது, மேலும் பொருளாதாரமும் மிச்சப்படுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%