ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

சந்திரசேகரபுரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 01- ந்தேதி திங்கட்கிழமை காலை, மாலை இரண்டு வேளையும் ஹோமங்கள், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. 02- ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை புனித நீர் எடுத்து வரப்பட்டு மாலை யாகசாலை பூஜை முதல் காலம் நடைபெற்றது. 03- ந்தேதி புதன்கிழமை காலை யாகசாலை பூஜை இரண்டாம் காலம், மாலை யாகசாலை பூஜை மூன்றாம் காலம் நடைபெற்றது. இன்று (04- ந்தேதி) வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை நான்காம் காலம் நடைபெற்று காலை 9.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10- மணிக்கு மூலவர் விமானம், பரிவாரண விமான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் தக்கார்/ செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, ஓய்வு பெற்ற தக்கார்/ ஆய்வர் அ.ரமணி, குடமுழுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி. ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர், முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் சிவாகம் ப்ரவீன: சிவாகமரத்தினகாரம் வேதாகம சிரோன்மணி பட்டீஸ்வரம் சிவ ஸ்ரீ ஈசான கும்பகோணம் ஆர்.ஜயப்ப சிவாச்சாரியார், ஆலய போதகர் சிவாகம கலாநிதி அலங்கார பூஷணம் சிவஸ்ரீ அகோர சிவ சந்திரசேகரபுரம் கே.எஸ். வீரமணி சிவாச்சாரியார், உபசாதகம் சிவாகம சூடாமணி உடையாளூர் ஜி.‌ சுவாமிநாத சிவம் ஆலய அர்ச்சகர் சிவாகம பாஸ்கரா சந்திரசேகரபுரம் வி. சேகர் சிவம் மற்றும் குழுவினர், ஆலய திருப்பணி ஸ்தபதியார் திருமருகல் ஆர். சிங்காரவேலு, நாதஸ்வர இசை வலங்கைமான் எஸ்.யூ. அருண்குமார் குழுவினர், யாகசாலை பந்தல் அமைப்பு திருபுவனம் வி.கணேசன் குழுவினர், ஒளி,ஒலி அமைப்பு சந்திரசேகரபுரம் வலம்புரி ஆடியோஸ், வீடியோ வலங்கைமான் மதி டிஜிட்டல்ஸ் ஸ்டுடியோ, நளபாகம் அறுசுவை வேந்தன் உடையாளூர் கே.ஜெயராமன் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


கும்பாபிஷேகம் விழா ஏற்பாடுகளை தக்கார்/ செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, குடமுழுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி.ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர் முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%