வீரம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகதீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் :
Sep 04 2025
10

செய்யாறு, செப். 5 -
செய்யாறு அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகதீஸ்வரர் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது வீரம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் தொன்மை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் புரணமிப்புப்பு பணிக்காக, இந்து சமய அறநிலய துறையின் ஆணையத்தின் பொது நல நிதியிலிருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கோயில் புறம் புரணமைப்பு பணியில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி முதல் காலை யாக பூஜையும் மறுநாள் விசேஷ சாந்தி நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை அகிலாண்டேஸ்வரி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் கோபுரத்தில் மீதுள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?