
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் ஸ்ரீ பாரத் வித்யாலயா தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் மருத்துவர் கா. தாரணி தலைமையில் நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் க. ஷீலாவதி அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியை தமிழ் பாவை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவர் சா. காளிச்செல்வம், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் தமிழ்நாடு தினம் பெயர் சூட்டப்பட்ட தினம் பற்றி கூறினார்கள் இந்த நிகழ்வில் தமிழ்நாடு வரைபடத்தில் ஊர்களின் பெயர்கள் குறிக்கும் போட்டி நடைபெற்றது சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. நிகழ்வில் நூலகர் ஜா.தமீம், கலைஞர் முத்தமிழ் சங்கத் தலைவர் வந்தை குமரன் தமிழ்நாடு தினம் பற்றி வாழ்த்துரை வழங்குகிறார். நிகழ்வின் இறுதியாக ஆசிரியை தாமரைச்செல்வி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?